காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவக்கம்



பகிர்க copied

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 10ம் தேதி தொடங்கும் நவராத்திரி விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள நுாற்றுகால் மண்டபம் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத அமாவாசையன்று நவராத்திரி விழா தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு நவராத்திரி விழா, வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இதில், உத்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களிலும், தினமும் காலை 6:00 மணிக்கு தாயாருடன், உற்சவர் வரதராஜ பெருமாள் கண்ணாடி அறையில் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு தாயாருடன், பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள நுாற்றுகால் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். அங்கு, ஊஞ்சல் சேவை உத்சவம் உள்ளிட்டவை நடைபெறும். வரும் 20ம் தேதி நவராத்திரி விழா நிறைவுபெறும். வரும் 21ம் தேதி நடைபெறும் பார்வேட்டை உத்சவத்தில், வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவார். தற்போது, நுாற்றுகால் மண்டபம் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்