வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது



பகிர்க copied

சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


நவராத்திரி விழா நாடு முழுவதும் இன்று துவங்கி கொண்டாட்டப்பட்டு வருகிறது. சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் இந்த வருடம் ‛சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு இன்று நவராத்திரி விழா துவங்கியது. விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய விழா, ஐப்பசி மாதம் 02ம் நாள் திங்கட்கிழமை 19ம் தேதி பூர்த்தியாகிறது. பக்தர்கள் அனைவரும் தினமும் நடைபெறும் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், சிறப்புப் பூஜை தீபாராதனை மற்றும் பொதுமக்களின் கொலு பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்து அம்பாளின் அருள் பெறலாம்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்