அயோத்தி ராமர் கோயில் பிரசாதத்திற்கு உணவுப் பாதுகாப்பிற்கான உயரிய சான்றிதழ்



பகிர்க copied

அயோத்தி ; அயோத்தி ராமர் கோயில், பிரசாதப் பாதுகாப்பிற்காக FSSAI-இன் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றது; நகரின் மேலும் 5 வழிபாட்டுத் தலங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


அயோத்தியில் உள்ள ராமர் கோயில், பிரசாதத்தைத் தயாரித்து விநியோகிக்கும்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரநிலைகளைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) திட்டத்தின் கீழ் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தர மதிப்பீட்டில் 114-க்கு 103 புள்ளிகளைப் பெற்ற ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராஇந்த தரநிலையைப் பெற்றது. அனுமன்கர்ஹி, கனக் பவன், ஒரு சமணக் கோயில் மற்றும் தேவ்காலி கோயில் உள்ளிட்ட அயோத்தியின் மேலும் ஐந்து வழிபாட்டுத் தலங்களும் இந்த சான்றிதழைப் பெற்றன. FSSAI-இன் தலைமை நிர்வாக அதிகாரி ரஜித் புன்ஹானி மற்றும் உத்தரப் பிரதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் (UPFSDA) அதிகாரிகள் கலந்துகொண்ட அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்தச் சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவ்வப்போது பிரசாதத்தின் தரம் குறித்து தணிக்கை செய்வர். கோவில் அறக்கட்டளையும், 15 நாட்களுக்கு ஒருமுறை, உள்மதிப்பீடு செய்து தரத்தை பராமரிக்கும்.



பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்