கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி வழிபாடு



பகிர்க copied

விழுப்புரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், நவராத்திரி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் அருகே கோலியனுாரில் உள்ள ஸ்ரீ பூமி, நிலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், நவராத்திரி வழிபாடு கடந்த, 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு, நரசிம்மர் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு, தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிகளுக்கு அர்ச்சனை, தீபாரதனை நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்