பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள மரச்செடிகள்



பகிர்க copied

சாலவாக்கம்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள மரச்செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், பிரம்மோத்சவ விழா, பிரதோஷம், மஹா சிவராத்திரி, பவித்ர உத்சவம் உள்ளிட்ட நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில், கோவில் கோபுரத்தில் மரச்செடி வளர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சிதைந்து, நாளடைவில் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள மரச்செடிகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்