காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி மகா அபிஷேகம்



பகிர்க copied

கோவை : காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத 5ம் சனிக்கிழமை முன்னிட்டு  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது . தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ திருக்கோவில் வலம் வந்து கல்யாண மண்டபம் அடைந்து  பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.இந்த வைபவத்தில் திருக்கோவில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் செயல் அலுவலர், ஸ்ரீ பாதம் தாங்கிகள், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்