நவராத்திரி விழா: கோயில்களில் அம்மன் அம்பு எய்தல் வைபவம்.. பக்தர்கள் பரவசம்



பகிர்க copied

திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி விழா நிறைவாக இன்று நடந்த அம்மன் அம்பு எய்தல் வைபவத்தில் பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தரிசித்தனர்.


திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் அக்.,11 ல் மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது. தினசரி இரவு 7:00 மணிக்கு கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி தீபராதனை நடந்தது. மூன்றாம் திருநாளில் விளக்கு பூஜை நடந்தது. இன்று அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் முன்பாக அம்பு எய்தல் நடந்தது.


திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அக்.,11 முதல் நவராத்திரி விழா துவங்கியது. தினசரி திருநாள் மண்டப கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி இரவு 7:45 மணிக்கு தீபராதனை நடந்தது. ஆறாம் திருநாளில் அம்மன் சன்னதியில் விளக்கு பூஜை நடந்தது. நேற்று மாலை அம்மன் குதிரை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகியது. பின்னர் தேரோடும் வீதியில் அம்மன் எழுந்தருளி அம்பு எய்தல் நடந்தது.


இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் அக்.,11ல் ஏகாந்தம் அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி விழா துவங்கியது. தினசரி அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. இன்று மாலை குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து கோயிலிலிருந்து புறப்பாடாகி அம்பாள் அம்பு போடுதல் நடந்தது. தினசரி கொலுவை தரிசிக்கவும், நேற்று அம்பாள் அம்பு எய்தலை தரிசிக்கவும் பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினசரி காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு திருமஞ்சனம்,தீபராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலுவில் அலங்காரத்தில் எழுந்தருளியுள்ள உற்ஸவ அம்பாளுக்கு தீபராதனை நடந்தது. இன்று காலை 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்ற வித்யாரம்ப வைபவம் நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்