துாத்துக்குடி: இடி தாக்கியதில், நுாற்றாண்டை கடந்த சர்ச் கோபுரத்தில் இருந்த இயேசு சொரூபத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தில், இன்று பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நுாற்றாண்டுகளை கடந்த சின்னக்கோவில் என அழைக்கப்படும் சர்ச் கோபுரத்தில் இருந்த இயேசு சொரூபத்தின் இடதுகை பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொரூபத்தை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.