திருக்கோவிலூர் தபோவனத்தில் நவராத்திரி விழா நிறைவு



பகிர்க copied

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், தபோவனத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக அம்பாள் அசுரனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. 


திருக்கோவிலூர், தபோவனம், ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று காலை 5:00 மணிக்கு சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவாரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மகிஷாசுரமர்த்தினியாக எழுந்தருளி, வாழை மரத்தில் அசுரனை அம்பு எய்தி வதம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி கோவிலை வலம் வந்து சன்னதியை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்