ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி



பகிர்க copied

ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.


வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது. விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை அம்பாள் வதம் செய்ததாக ஐதீகம். இதையடுத்து, கோவிலின் முன் வாழை மரத்தை நட்டு, அதில் மகிஷாசூரனை மந்திரபூர்வமாக ஆவாஹனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவர் அரங்கநாத பெருமாள் ஹம்ச வாகனத்தின் மீது ரங்கராஜராக எழுந்தருளி வாழை மரத்தை நோக்கி அம்பு எய்தினார். மாட வீதி வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேஷலட்சுமி குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர். செயல்அலுவலர் சூரியநாரயணன், எழுத்தர் லோகநாதன், பணியாளர் சிவபிரகாஷ், அறங்காவலர் குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்