தசரா விழா: மகிசாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்



பகிர்க copied

செங்கல்பட்டு: தசரா விழாவின் கடைசி நாளான நேற்று, மகிசாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி செங்கல்பட்டு நகர் பகுதிகளில் உலா வந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


செங்கல்பட்டில் தசரா விழா, கடந்த 11ம் தேதி தொடங்கி சின்னக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன்கோவில், மேட்டுத்தெரு, அங்காளம்மன் கோவில், முத்துமாரியம்மன்கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில், அம்மன் சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். கடந்த 19ம் தேதி கோவில்களில், சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்புரிந்தார். அதன்பின், விஜயதசமியையொட்டி, மகிஷசூரமர்த்தினி அம்மன் உட்பட 25 க்கும் மேற்பட்ட அம்மன் சிலைகள் மலர்களால் அலங்காரம் மற்றும் துர்கா வேடமிட்டு, வாணவேடிக்கை கோலாகலமாக நடந்தது. வீதியுலா, அதை தொடர்ந்து, நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் சூரசமஹாரத்தின் போது, வன்னிமரத்தில் அம்பு எய்து, சூரனை வதம் செய்யும், நிகழ்ச்சி, நேற்று விமரிசையாக நடந்தது. அசுர வத விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கே ற்று சுவாமியை தரிசித்தனர். செங்கல்பட்டு டி.எஸ்.பி., வீரகுமார் தலைமையில், நுாறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்