மஞ்சப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை: பக்தர்கள் வேதனை



பகிர்க copied

வேப்பூர்: வேப்பூர் அருகே ஶ்ரீ மஞ்சப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.


திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ மஞ்சப்பர் கோவில் உள்ளது. இங்கு, வேப்பூர், திட்டக்குடி, ஆத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக சுவாமியை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பக்தர்களின் பல ஆண்டுகள் ஆதங்கமாக உள்ளது. பல கி.மீ., தூரம் பயணித்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லை.


மேலும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கோவிலுக்கு செல்லும் சாலை, பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதை தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் அவ்வழியே பக்தர்கள் வரும் வாகனங்கள் சேற்றில் சிக்குகின்றன. குடும்பத்துடன் கஷ்டங்களை மறந்து சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைகின்றனர். எனவே, ஶ்ரீ மஞ்சப்பர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்