காரமடை அரங்கநாதர் கோவிலில் ஐப்பசி ஏகாதசி வைபவம்: திரளான பக்தர்கள் தரிசனம்



பகிர்க copied

காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


ஏகாதசி விழாவை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கால சந்தி பூஜை நிறைவடைந்த பின், விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியாவசனம் மற்றும் கலச ஆவாகனம் ஆகிய வைபவங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருமஞ்சனம் முடிந்த பின், ஸ்ரீ ரங்கநாதர் பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், வெண்பட்டு குடை சூழ, மேள தாளங்கள் முழங்க வெள்ளி சப்பரத்தில் கோவில் வளாகத்தை வலம் வந்தார். சாமி புறப்பாடு முடிந்தவுடன் ஆஸ்தானம் சேர்ந்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் தொடர்ச்சியாக உச்சகால பூஜை மற்றும் சாற்றுமறை மகாதீப ஆராதனை நடைபெற்றன. இந்த ஆன்மிக வைபவத்தில் ஸ்தலத்தார்கள், வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, நவராத்திரி உற்சவம் நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று அரங்கநாதர் சுவாமி குதிரை வாகனத்தில் அமர்ந்து, நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்