அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்: நுாபுர கங்கையில் விரித்த கூந்தலுடன் நீராடிய பெருமாள்



பகிர்க copied

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை தீர்த்தத்தில் சுந்தரராஜ பெருமாள் புனித நீராடினார்.


மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஐப்பசியில் நடைபெறும் தைலக்காப்பு திருவிழா இந்தாண்டு அக்., 21ல் நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் துவங்கியது. விழாவில் நேற்று அக்., 22ல் சீராப்திநாதன் (சயனம்) கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அக்., 23 காலை 7:45 மணிக்கு கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்படும் சுந்தரராஜ பெருமாள், சகல பரிவாரங்களுடன் அழகர்மலை மீதுள்ள நுாபுர கங்கைக்கு மலைப்பாதை வழியாக சென்றார். அங்கு காலை 9:30 மணிக்கு மேல் தைலக்காப்பு சாத்தப்பட்டு பெருமாளுக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தால் திருமஞ்சனம் நடைபெற்றது. புனித நீராடிய பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலையில் சர்வ அலங்காரத்துடன் ராக்காயி அம்மன் கோயிலில் இருந்து புறப்படும் பெருமாள், வந்த வழியே இருப்பிடம் சேர்கிறார். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்