சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று தொடக்கி வைத்தார்.
சட்டசபை கூட்டத் தொடரில் அறநிலையத்துறை சார்பில், தனியார் பிரசாதக் கடைகளுக்கு மாற்றாக, கோவில் நிர்வாகமே நேரடியாகப் பிரசாதங்களைத் தயாரித்து, பக்தர்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி கோவில், கோவை மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட 37 முதுநிலை கோவில்களில், நிர்வாகத்தின் வாயிலாக பிரசாதங்கள் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நிர்வாகத்தின் வாயிலாக தயாரிக்கப்படும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்கி திட்டத்தை அமைச்சர் ரமேஷ் இன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், அறநிலையத்துறை கமிஷனர் வினய், கூடுதல் கமிஷனர் மாரிமுத்து, இணைக் கமிஷனர் ரேணுகாதேவி, கோவில் துணைக் கமிஷனர் நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.