ஐப்பசி பவுர்ணமி: அன்னாபிஷேகம் தரிசிப்போம்.. கோடி சிவலிங்கங்களை ஒரே இடத்தில் தரிசித்த பலன் பெறுவோம்!



பகிர்க copied

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.


ஐப்பசி மாத பவுர்ணமிக்கு மிகுந்த விசேஷம் உண்டு. சந்திரன், பூமிக்கு அருகில் வரும் நாட்களில் இதுவும் ஒன்று. இந்த நாளில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்படும். உணவை கடவுளாக கருத வேண்டும் என்பதற்காகவே சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர்.சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பர். அதாவது சிவன் கோயிலில் நடக்கும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவன் சொர்க்கத்தை அடைவான் என்பதே இதன் பொருள்.


வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் செய்வர். காலையில் தொடங்கும் அபிஷேகம் மாலை வரை நடக்கும். இன்று சிவன் மேல இருக்கும் ஒவ்வொரு சோறும் சிவ வடிவமாகவே இருப்பதால் கோடான கோடி லிங்கங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும். ஐப்பசி பவுர்ணமியில் அபிஷேகம் தரிசித்தால் வாழ்நாள் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படாது என்பது நம்பிக்கை. இன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் தரிசிப்போம்அமுடிந்த வரை அன்னதானம் செய்வோம்.. சிவபெருமானின் தெய்வீக அருளைப் பெறுவோம்..!


சோத்துக்குள்ளே சொக்கநாதர்: வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்