ஐப்பசி பவுர்ணமி விழா: திருத்தணி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்



பகிர்க copied

திருத்தணி: திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமி விழாவையொட்டி, நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.


திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று  ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசியால் மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு சுவாமி மீது சார்த்தப்பட்டிருந்த அன்னபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


திருத்தணி அடுத்த தாடூர் கடலீஸ்வரர் கோவில், திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருக்குளம் சரவணப்பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், பள்ளிப்பட்டு காமாட்சியம்மன் சமேத சங்கமேஸ்வரர் கோவில், மத்துார், அகூர் மற்றும் அருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. அதேபோல், கரிம்பேடு ஞானாம்பிகை சமேத நாதாதீஸ்வரர் கோவில், ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துார் வீரட்டானேஸ்வரர் கோவில், ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலை மரகதேஸ்வரர் மலைக்கோவிலிலும், நேற்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்