கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் பூர்த்தி விழா



பகிர்க copied

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் பூர்த்தி விழா நேற்று நடந்தது.


கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் கடந்த 21ம் தேதி துவங்கி 5 நாட்களாக நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியான நேற்று காலை விஸ்வரூப தரிசனத்திற்கு பின் பெருமாள், தாயார், உபயநாச்சியார், ஆழ்வார்கள் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் பவித்ர மாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்