பரமக்குடி சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக்காப்பு உற்ஸவம்: தீர்த்தம் அபிஷேகம்



பகிர்க copied

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் பெருமாளுக்கு புனித நீராட்டல் நடந்தது.


பரமக்குடி அழகர் கோயில் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைலக்காப்பு உற்ஸவம் நடக்கிறது. அக்., 22 இரவு பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் தீர்த்தவாரி மண்டபம் எழுந்தருளினார். அங்கு அழகர் கோயில் கோபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வாசனை திரவியங்கள் மூலம் பெருமாளின் திருமுடியை அலங்கரித்து தூப தீப ஆராதனைகள் நடத்தப்பட்டது. நேற்று இரவு ஊஞ்சல் சேவையில் பெருமாள் அமர்ந்தார். தொடர்ந்து இன்று சிறப்பு அலங்காரமும், (அக்., 26) நாளை 5ம் நாள் விழாவில் இரவு கருட வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது.அப்போது பக்தர்களுக்கு பெருமாளின் அபிஷேக வாசனை திரவியங்கள் பிரசாதமாக வழங்கப்படும்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்