கூடலூர், லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்



பகிர்க copied

கூடலூர், முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கூடலூர், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் 11ம் ஆண்டு அன்னாபிஷேக திருவிழா நேற்று, சிறப்பாக நடந்தது. காலை 5:00 கணபதி ஹோமம், காலை 11.30 மணி க்கு லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நந்தட்டி மாதேஸ்வரன் கோவிலில், அன்னாபிஷேகம் பூஜை சிறப்பாக நடந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்