தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்



பகிர்க copied

மதுக்கரை, மரப்பாலம் அருகேயுள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமி முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி தர்மலிங்கேஸ்வரருக்கு காலையில் விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மதியம், 12:00 மணிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, மதியம், 2:00 மணிக்கு கலைக்கப்பட்டது.

அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தில் கலக்கப்பட்டது. இதையடுத்து அலங்காரம், அபிஷேகம் நடந்தது.

பவுர்ணமி முன்னிட்டு காலை 8:00 முதல் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்