பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள சமணர் கோவில் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்



பகிர்க copied

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றத்தில், சமணர் தலமாக விளங்கும் பழமையான திரைலோக்கியநாதர் கோவிலின் ராஜகோபுரம் பொலிவிழந்தும், பிற சன்னிதிகளின் கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் சேதமடைந்து உள்ளன. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றத்தில், கி.பி., 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சமணர் தலமான திரைலோக்கிய நாதர் கோவில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக திகழும் இக்கோவில், தமிழக தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சமணர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் காலை – மாலையில், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் ராஜகோபுரம் பொலிவிழந்தும், பிற சன்னிதிகளின் கோபுரத்தில் கலசங்கள் மற்றும் மண்டபம் உள்ளிட்டவை சேதமடைந்தும் உள்ளன. எனவே, சமணர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, தமிழக தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்