நெரூர் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானத்தில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்



பகிர்க copied

கரூர்: கரூர் மாவட்டம், நெரூரில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம், விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கின. பின்னர் இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நிறைவு பெற்றதும், 6:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு யாத்ரா தானம் நடந்தது. அதன் பின்னர், 9:30 மணிக்கு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்கள் மற்றும் மூலஸ்தானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன், மற்றும் பிற சன்னதிகளில் சாந்தாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்