திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், பூஜை நடந்தது.
* திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து 30 படி பச்சரிசியினால் தயாரிக்கப்பட்ட சாதத்தின் மூலம் அன்னாபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில்களில் மூலவர்களுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
* மலைக்குப் பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகங்கள், பூஜை முடிந்து அன்னம் சாத்துப்படி செய்து, பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டது.
* திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதர், பாண்டியன் நகர் கல்யாண விநயாகர் கோயில் சிவபெருமான், ஹார்விபட்டி ஜோதிலிங்கேஸ்வரர் மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது.
* விளாச்சேரி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோயிலில் மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிவாச்சாரியார்கள் அன்னாபிஷேகம் நடத்தினர்.
மருதீஸ்வரருக்கு கோயிலில் தயாரித்து வழங்கப்பட்ட அன்னத்தை பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அலங்காரம் செய்தனர். பின்பு மூலவர்களுக்கு பூஜை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதம் வழங்கப்பட்டது.
* அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் 16 வகை அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.