அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் எனப்படும் ஸ்ரீ ராம லல்லாவுக்கான பூஜைகள், ஆரத்தி, நைவேத்தியம் மற்றும் பக்தர்கள் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய அட்டவணை நவம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போது அதிகாலை 3.45 மணிக்குத் திறக்கப்படும் கோவில் நடை, இனி அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்படும். இரவு 10.30 மணிக்குப் பதிலாக இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
நவம்பர் 1 முதல் புதிய தரிசன அட்டவணை அமலுக்கு வருவதால், அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள் மாற்றப்பட்ட நேரங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தரிசன நேர அட்டவணை - காலை - நேரம்
அதிகாலை 4.00 மணி – கோவில் நடை திறப்பு
அதிகாலை 4.30 – 4.40 மணி – மங்கள ஆரத்தி
அதிகாலை 4.40 – 6.30 மணி – அபிஷேகம், அலங்காரம், தூப தீபம் மற்றும் நைவேத்தியம்
காலை 6.30 மணி – அலங்கார ஆரத்தி
காலை 7.00 மணி – பக்தர்கள் தரிசனம் தொடக்கம்
காலை 8.00 – 8.10 மணி – பால போகத்துக்காக நடை அடைப்பு
காலை 8.10 – 11.30 மணி – தரிசனம்
காலை 11.30 – மதியம் 12.00 மணி – ராஜ போகம்
மதியம் 12.00 மணி – ராஜ போக ஆரத்தி
மதியம் 12.30 – 1.30 மணி – ஸ்ரீ ராம லல்லாவுக்கு ஓய்வு
மதியம் மற்றும் மாலை நேரம்
மதியம் 1.30 மணிக்குப் பிறகு – அர்ச்சகர்கள் உள்ளே செல்வதற்கான நடைமுறைகள் மற்றும் லகு போகம்
மதியம் 1.35 மணி – தரிசனம் மீண்டும் தொடக்கம்
மாலை 4.00 – 4.10 மணி – பால போகத்துக்காக நடை அடைப்பு
மாலை 4.10 – 6.45 மணி – தரிசனம்
மாலை 6.45 – 7.00 மணி – தூப தீபம் மற்றும் நைவேத்தியம்
இரவு 7.00 மணி – சந்தியா ஆரத்தி
இரவு 8.00 – 8.30 மணி – தூப தீபம் மற்றும் நைவேத்தியத்துக்காக நடை அடைப்பு
இரவு 8.30 – 9.15 மணி – தரிசனம்
இரவு 9.15 – 9.30 மணி – தூப தீபம் மற்றும் நைவேத்தியத்துக்காக நடை அடைப்பு
இரவு 9.30 மணி – சயன ஆரத்தி
இரவு 10.00 மணி – கோவில் நடை சாத்தப்படும்.