விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா



பகிர்க copied

நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை, உள்ளிட்ட பல பூமாலைகள் செலுத்தபட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப் போலவே நத்தம் பெரியவிநாயகர் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோவிலில் உள்ள வலம்புரி விநாயகர் சன்னதிகளிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்