விழுப்புரம் வைத்தீசுவரன் கோவில் கும்பாபிஷேகம்



பகிர்க copied

விழுப்புரம்: விழுப்புரம் வைத்தீசுவரன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் வழுதரெட்டி, திருநகரில் தையல் நாயகி அம்மை உடனுறை வைத்தீசுவரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் அதிகாலை 5:45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6:00 மணிக்கு விநாயகர், முருகர், நந்தியம்பெருமான், சண்டீகேசுவரர், நால்வர், பைரவர், நவகிரகம் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 8:15 மணிக்கு பேரொளி வழிபாடு, 9:15 மணிக்கு விமானங்களுக்கு கும்பாபிேஷகம், 9:30க்கு மூலத்திருமேனிகளுக்கு கும்பாபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, மாலை 5:00 மணிக்கு அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதிமக்கள் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்