நெருங்கும் சபரிமலை சீசன்: கொல்லம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பதில் மெத்தனம்



பகிர்க copied

மூணாறு: சபரிமலை சீசன் நெருங்கும் நிலையில், கொல்லம், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை சீரமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.


அந்த தேசிய நெடுஞ்சாலையை சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகம் பயன்படுத்துவர். குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தவிர கேரளாவில் பிற மாவட்டங்களை சேந்தவர்கள், பழநி, வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்லும் குட்டிக்கானம், மருதும்மூடு இடையே கடந்த பருவமழையின்போது பல இடங்களில் பாறைகள் உருண்டும், மண்சரிவு ஏற்பட்டும் ஆபத்தாக உள்ளன. தற்போது சபரிமலை சீசன் நெருங்கும் நிலையில் ரோட்டை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். சாதாரணமாக அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். அதேபோல் வளஞ்சகானம் பகுதியில் ரோடு ஆபத்தான வளைவுகளுடன் மிகவும் குறுகலாக உள்ளது. அதனை உணர்ந்தும் வகையிலான முன்னெச்சரிக்கை போர்டுகளை செடி, கொடிகள் மறைத்துள்ளதால் ரோட்டின் தன்மை குறித்து அறிய இயலாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். சீசன் துவங்கும் முன் ரோட்டை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்