குன்றத்துார் முருகன் கோவிலில் வரும் 15ல் சூரசம்ஹார விழா



பகிர்க copied

குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில் 15ல் சூரசம்ஹார விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.


குன்றத்துாரில் உள்ள முருகன் கோவிலில், வரும் 10ல் கந்தசஷ்டி விழா தொடங்கி 15 வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 15ம் தேதியும், திருக்கல்யாணம் 16ம் தேதியும் நடக்கிறது. இந்த விசேஷ நாட்களில் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். அவசரகால ஆம்புலன்ஸ், குடிநீர், கழிப்பறை, சிறப்பு பேருந்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, சூரனின் அவதார பொம்மைகள் வண்ணம் தீட்டும் பணிகள், கோவில் வளாகத்தில் நடந்து வருகின்றன.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்