சபரிமலைக்கு 1,126 கி.மீ., நடந்தே சென்ற கர்நாடகாவை சேர்ந்த 63 வயது பெண்

நவம்பர் 23,2026



பகிர்க copied

சபரிமலை: சாதிக்கும் மன உறுதியும், அசைக்க முடியாத கடவுள் பக்தியும் இருந்தால் வயது ஒரு தடையாக இருக்காது என்பதற்கு சாட்சியாக உள்ளார், பீமாபாய் ரேவப்பா சலமகி, 63. இவர், கர்நாடகாவின் பாகல்கோட்டில் இருந்து கேரளாவின் சபரிமலைக்கு, 1,126 கி.மீ., நடந்தே சென்று, தனது தெய்வ பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


சபரிமலை அய்யப்ப சுவாமி மீது அளவு கடந்த பக்தி கொண்ட பீமாபாய், கடந்த 2023, 2024ம் ஆண்டும் சொந்த ஊரான ஊர் பாகல்கோட்டின் ஜமகண்டி தாலுகா, சாவலகி கிராமத்தில் இருந்து, சபரிமலைக்கு நடந்தே சென்றார். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்தால், அவர் சபரிமலைக்கு செல்லவில்லை. இந்த ஆண்டு தனது ஆன்மிக பாதயாத்திரையை, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி துவக்கினார். ஹூப்பள்ளி, கார்வார், முருடேஸ்வரா, உடுப்பி, மங்களூரு, கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம் வழியாக 1,126 கி.மீ., நடந்தே சென்று, சபரிமலை கோழிக்காவு சோதனை சாவடியை நேற்று அடைந்துள்ளார். இன்று அல்லது நாளை அய்யப்பனை தரிசனம் செய்ய உள்ளார். தினமும் 20 முதல், 25 கி.மீ., நடந்தே சென்றுள்ளார். நீண்ட துார பயணம் என்பதால் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்ட இவர், சோர்வு அடையாமல் இருக்க இளநீர், குளிர்பானங்களை குடித்துள்ளார். இரவில் கோவில்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஓய்வு எடுத்துள்ளார். கடந்த, 30 ஆண்டுகளாக ஆன்மிக தலங்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் பீமாபாய் மிக கடினமான, ஆன்மிக பயணமான நர்மதை நதிக்கரை யாத்திரையும் முடித்தவர். கிராம சேவை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஸ்ரீசத்ய சாய் சேவாதளத் தொண்டர்கள் கிராமங்களுக்குச் சென்று பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு இலவச டியூஷன், மகளிருக்கு தொழில் பயிற்சி, மருத்துவச் சேவை, கால்நடை மருத்துவ முகாம்கள், மரம் நடுதல், உடல்நலம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு எனப் பல பணிகள் இதில் இடம்பெறுகின்றன. தமிழகத்தின் 300 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இச்சேவைகளால் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் தத்தெடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் குடிநீர் வசதியின்றி தவித்த மக்களுக்காக, 2025 டிசம்பர் 21-ம் தேதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் கிடைத்து வருகிறது.


பகிர்க copied

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்