தினமும் மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்தே சென்று செய்திதாள் வினியோகிக்கும் முதியவர்

நவம்பர் 24,2026



பகிர்க copied

சபரிமலை: கடந்த 27 ஆண்டுகளாக தினமும் பம்பையில் இருந்து மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்தே சென்று செய்தித்தாள்களை ஸ்ரீதரன் சுவாமி, 68, என்பவர் வினியோகித்து வருவது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, கேரளாவின் வயநாடு மாவட்டம் மீனங்காடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சுவாமி கூறுகையில், “நான் அய்யப்பனை தரிசிக்கவே இதை செய்கிறேன்; அதேசமயம் என் பிழைப்புக்காகவும் இது தேவைப்படுகிறது. தினமும், மலை ஏறுவது தான் என் ஆரோக்கியத்திற்கு காரணம்,’’ என்றார். கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நாட்களிலும், ஸ்ரீதரன் மலை ஏறி தலைமைப் பூசாரி உட்பட 15 பேருக்குச் செய்தித்தாள்களைக் கொண்டு சேர்க்கிறார். ‘‘மண்டல பூஜை காலங்களில், செய்தித்தாள்களின் எண்ணிக்கை, 250ஐ கடக்கும்,’’ என்றார்.


பகிர்க copied

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்