சபரிமலையில் 5 நாட்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை!

நவம்பர் 23,2026



பகிர்க copied

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 11 பேரை, சுகாதாரத் துறையினரின் துரித மருத்துவ உதவி காப்பாற்றியுள்ளது. மேலும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


யாத்திரை தொடங்கிய முதல் ஐந்து நாட்களில், அதாவது சனிக்கிழமை நண்பகல் வரை, மொத்தம் 13,029 பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்துள்ளார். பம்பை, நீலிமலை, அப்பாச்சிமேடு, சன்னிதானம், சாரல்மேடு, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மூலம் பக்தர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சை மையங்களில் மட்டும் 4,360 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மேல் சிகிச்சை தேவைப்பட்ட 116 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலை ஏறும் பக்தர்கள் தங்களது உடல்நிலையை கவனத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மார்புவலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் அல்லது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மலை ஏறுவதை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மருத்துவ மையத்தை அணுக வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணையும், சபரிமலை சுகாதார உதவி எண்ணான 04735 203232 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.


பகிர்க copied

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்