பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா ; ஏப். 13ல் கொடியேற்றம்



பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 13 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, விஷாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு ஏப்.,12 இரவு அனுக்கை, காப்பு கட்டு நடக்கிறது. ஏப்., 13 காலை 10:45 மணி துவங்கி சித்திரை திருவிழாவின் முன்னோட்டமாக கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட உள்ளது. அன்று தொடங்கி தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருவர். ஏப்., 19 இரவு குதிரை வாகனத்தில் திக்விஜயம், மறுநாள் காலை கமல வாகனத்தில் அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளுவார். அன்று மாலை ரிஷப வாகனத்தில் மாலை மாற்றுதல் நடக்கும். ஏப்., 21 காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் விசாலாட்சி அம்பாள், சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு பட்டண பிரவேசம் நிறைவடைந்து, மறுநாள் காலை 9:15 மணி துவங்கி, ரத வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து ஏப்., 23 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கமும், மறு நாள் உற்சவ சாந்தி அபிஷேகத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்