குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் படித்துறை வளாகத்தில் நிலவும் சுகாதாரக்கேடு



சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கை கால் சுத்தம் செய்யும் சுரபி நதி படித்துறை முழுவதும் அசுத்தமாக உள்ளது. கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென உள்ள தனி கோயிலாகும். இங்கு மூலவராக சனீஸ்வர பகவான் உள்ளார். சுயம்புவாக எழுந்தருளியவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும். கோயில் வளாகத்தில், கோயிலிற்கு முன்புறம் ஒடும் சூரபி நதி வாய்க்காலில் குளித்தும், கை, கால்களை சுத்தம் செய்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கோடை காலம் என்பதால் சுரபி நதி வாய்க்கால் சாக்கடை நீரால் தேங்கி நிற்கிறது. துர் நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் கழற்றி போட்ட உடைகள் மலை போல் குவிந்து, வாய்க்கால் கரையில் தீ வைத்து எரிக்கப்பட்டு அப்படியே குப்பையாக கிடக்கின்றது. பக்தர்கள் படித்துறையில் செய்யும் கிரக நிவர்த்தி பூஜை பொருள்கள் அப்படியே கொட்டிக் கிடக்கின்றது. படித்துறை வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் கோயில் படித்துறையை சுத்தமாக பராமரிக்கவும், பக்தர்கள் போட்டு விட்டு செல்லும் உடைகளை சேகரம் செய்து, வேறு வெளியிடங்களுக்கு கொண்டு சென்று போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குச்சனூருக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் கண்டிப்பாக படித்துறையில் கை கால்களை சுத்தம் செய்து, அங்குள்ள விநாயகரை வழிபட்டு, பின் சனீஸ்வர பகவானை தரிசிக்க செல்கின்றனர். ஆண்டிற்கு லட்சக்கணக்கில் வருவாயை அள்ளி தரும் இந்த கோயில் படித்துறையை சுத்தமாக பராமரிக்க ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்