Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
  உற்சவர்: வைத்திய வீரராகவர்
  அம்மன்/தாயார்: கனகவல்லி
  தீர்த்தம்: ஹிருதாபதணி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
  புராண பெயர்: எவ்வுளூர், திருஎவ்வுள்
  ஊர்: திருவள்ளூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  மங்களாசாசனம்

திருமங்கைஆழ்வார், திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன்

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

-திருமங்கையாழ்வார்
 
     
 திருவிழா:
     
  பிரம்மோற்சவம் - தைமாதம் - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். பிரம்மோற்சவம் - சித்திரைமாதம் - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் - 7 நாட்கள் திருவிழா - இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.  
     
 தல சிறப்பு:
     
  மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 60 வது திவ்ய தேசம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6:30 – 12:00, மாலை 4:00 –8:00 மணி. அமாவாசை நாட்களில் காலை 5:00 – இரவு 8:30மணி. 
   
முகவரி:
   
  அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001, திருவள்ளூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-44-2766 0378, 97894 19330 
    
 பொது தகவல்:
     
  இங்குள்ள விமானம் விஜயகோடி. வனம்: வீஷாரண்யம்.  
     
 
பிரார்த்தனை
    
  வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் - அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300 .இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது. உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல் , நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.  
     
  தல வரலாறு:
     
  சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். 1 வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.பிறகு படுத்துறங்க அந்த கிழவர் ""எவ்வுள்' என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி "இவ்விடம் படுத்துக் கொள்ளவும்' என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் ""வரம் கேள்' என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar