Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கரண லக்ஷண முறை
படலம் 72: கரண லக்ஷண முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

72வது படலத்தில் கரண லக்ஷண முறை கூறப்படுகிறது. முதலில் சமித்து, பின்னல் போன்ற அமைப்புமுறைகள், விஷ்டரம், பரிதி, கூர்ச்சம் என்று இவைகளின் லக்ஷணமும் அமைப்பு முறையும் அதை உபயோகிக்கும் இடமும் அதை செய்ய உபயோகமான திரவ்யங்களும் விளக்கப்படுகின்றன. கூர்ச்ச விஷயத்திலோ உத்கூர்ச்சம், அதக்கூர்ச்சம், அந்தக் கூர்ச்சம், என்று மூன்று பேதம் கூறப்படுகிறது. உத்கூர்ச்சம் சாந்தி கர்மாவிற்கும், அதக்கூர்ச்சம் புஷ்டிகர்மாவிற்கும் அந்த கூர்ச்சம் ஆபிசாரத்திற்கும், செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பவித்ர லக்ஷணமும் அதை உபயோகிக்கும் முறையும், அதன் திரவ்யமும் கூறப்படுகின்றன. பிறகு பவித்திரத்திற்காக ஸ்வர்ணத்தால் நிர்மாணம் பண்ணப்பட்ட பவித்ர மோதிரமும் விரும்ப தக்கது என கூறப்படுகிறது. தர்பமாலையின் லக்ஷணமும், அதை அமைக்கும் முறையும், அதன் திரவ்யமும் விளக்கப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டையில் செய்யவேண்டிய தான தோரணத்தின் அளவு தோரண திரவ்யம், அதை உபயோகிக்கும் முறை, ஏற்படுத்தும் முறை இவைகள் கூறப்படுகின்றன. பிறகு தர்பணம், பூர்ணகும்பம், வருஷ்பம், யுக்ம சாமரம், ஸ்ரீவத்சம், ஸ்வதிகம், சங்கம், தீபம் ஆகிய சிவனின் அஷ்டமங்களம் என்று பெயர்களை கூறி அதை செய்யும் லக்ஷணம், அதன் அளவு முறை அதன் உருவ அமைப்பு, அதற்கு உபயோக மான திரவ்யங்கள் ஆகியவைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு மற்ற தேவர்கள், தேவீ, இவைகளுக்கு இந்த விஷயத்தில் விருஷபத்தை விட்டு அந்த மூர்த்திகளின் வாகனத்தை பூஜிக்கவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. கிராமம் முதலான இடங்களிலோ தன்னுடைய கிராஹத்திலோ யஜமானனின் உருவத்திற்கு தக்கவாறு தர்பணம் முதலான திரவ்யங்களை வரைய வேண்டும் என கூறி, அதன் அளவுகளை கூறுகிறார். ஸ்திரீகளின் சிரசில் இருக்கும் படியாகவோ தர்பணம் முதலிய அஷ்டமங்கலங்களை செய்யவும் என கூறுகிறார். தர்பணம் முதலிய அஷ்டமங்கலங்களில் பூஜிக்க வேண்டிய தேவதைகளை நிரூபிக்கிறார். பிறகு வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம், அங்குசம், த்வஜம், சூலம், பத்மம், சக்ரம் என தசாயுதங்களின் பெயர் நிரூபிக்கப்படுகின்றன.

பிறகு த்வஜமோ, கதையோ யென்று வேற்றுமையாக கூறப்படுகிறது. பிறகு தண்டத்தை தவிர்த்து, த்வஜமோ, அங்குசமோ செய்யலாம். தசாயுதங்கள் யாகத்திற்கு சம்மந்த பட்ட விருக்ஷங்களாலோ, உலோகங்களாலோ செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. தேவர்களை அஞ்சலி கையுடன் கூடியதாக செய்து அவர்கள் சிரசில் தசாயுதங்களை கல்பிக்கவும் என கூறப்படுகிறது. தசாயுதங்களில் சக்தியும் கதையும், ஸ்திரீ ரூபமாகும். மற்றவை புருஷலக்ஷணங்கள் என கூறப்படுகின்றன. தசாயுதங்களின் விஷயத்தில் அளவுகள் அதை செய்யும் முறை பிறகு ஸ்ருக்சுருவம் அமைக்கும் முறை விஸ்தாரமாக கூறப்படுகிறது. கரணங்கள் செய்யும் விஷயத்தில் புதியதாக செய்தால் சிரேஷ்டமானது. அது முடியாவிட்டால் பணத்தை கொடுத்து பழைய கரணங்களை ஆசார்யனிடமிருந்து வாங்கிக்கொள்ளவும். முன்பு செய்யப்பட்டதான திரவ்யங்களை கிரஹிக்கும் விஷயத்தில் பிராயசித்தம் செய்யவும் எனக் கூறி பிராயச்சித்த முறை கூறப்படுகிறது. பிறகு எந்த சாஸ்திரத்தினால் எந்த கார்யம் முன்பு அனுஷ்டிக்கப்படுகிறதோ அங்கு அந்த சாஸ்திரசித்தத்தினால் செய்யப்பட்ட கரணமே கிரஹிக்க வேண்டும். அங்கு சொல்லப் படாததை வேறு கிரந்தத்தினால் கிரஹிக்க வேண்டும். சொல்லப்படாததை உத்ஸவம் முதலியகர்மாக்களில் அஸ்திரம், பிரதிமை தேவ உபகர்ணாதிகள் எல்லாம் அந்த ஆலய சித்தமாகவே இருப்பது சிரேஷ்டம். அந்தலிங்கம் முதலியவைகளின் வேற்றுமை ஆயாதி முதலான அளவுகளால் அமைப்புடன் கூடியதாகவோ வேறு ஆலயத்தில் இருந்ததாகவோ கிரஹித்து கொள்ளக் கூடாது என கூறப்படுகிறது. பிறகு ஒருஸ்தானத்திலிருந்து வேறு ஸ்தானத்திற்கு கொண்டு செல்லும் தோஷ சாந்திக்காக, அனுஷ்டிக்க வேண்டிய பிராயசித்தவிதி கூறப்படுகிறது. முடிவில் யாகசாலை முதலியவைகளில் செய்ய தோரண விஷயங்களின் லக்ஷணம் அளவுமுறைப்படி கூறப்படுகிறது. இவ்வாறு 72வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பூஜைக்கு உபயோகிக்கும் பொருட்களின் அமைப்பு முறையை சுருக்கமாக கூறுகிறேன். யக்ஞ சம்பந்தமான மரங்களிலிருந்து உண்டானதும், பன்னிரண்டங்குலமுடையதாகவும் உள்ளது சமித்துக்களாகும்.

2. அந்த ஸமித்துக்களும் தோலுடன் கூடியதாகவும், ஸமமாக வெட்டியதாகவும் வளைவு, முடிச்சு இல்லாததாகவும் இருக்க வேண்டும். முப்பது தர்ப தளங்களில் நெருக்கமானதும் ஒருமுழ அளவாக வெட்டப்பட்டதாகவும்

3. பின்னல் போன்றதாகவோ, முறுக்கியதாகவோ, தர்பைகளால் நிர்மாணிக்கப்பட்டதாக (விஷ்டரம்) இருக்க வேண்டும். அந்தந்த குண்ட மேகலை அளவுள்ளதாகவும் நுனியுள்ளதாகவும் நேரானதாகவும் அந்த குண்டத்திற்கு ஏற்பட்ட சமித்து உடையதாகவும்

4. திவாரம் முதலியன இல்லாததாகவும் ஸமமாக வெட்டியதாகவும் பரிதிகள் (சமித்து) இருக்க வேண்டும். நான்கு விஷ்டரமும் பரிதியும் அவ்வாறே (4) உள்ளதாக நினைக்க வேண்டும்.

5. மூன்று தர்பம் முதற்கொண்டு ஒவ்வொரு தர்பம் அதிகரித்ததாக முப்பத்தியாறு தர்பம் வரையிலும் கூர்ச்சத்திற்காக தர்பையை கிரஹிக்க வேண்டும்.

6. அதே முப்பத்தாறு மாத்ர அளவான நீளமும் ஆகும், பதினோரு மாத்ர அங்குல அளவினால் முடிச்சாகும். அரையங்குல பத அதிகரிப்பால் இரண்டங்குல அளவு வரையில்

7. முடிச்சு பிரதட்சிணையாக சுற்றப்பட்டு, சிகையளவு இரண்டு மாத்ரையாக அமைக்கவும். ஒரு மாத்ரையங்குல அதிகரிப்பால் ஒன்பது மாத்ரையளவு வரையிலும்

8. முடிச்சு உள்ளதாகவும், நுனி முடிச்சு இல்லாமலும் கூர்ச்சங்கள் கூறப்பட்டன. பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் கூர்ச்சத்தின் முறையே அடி, நுனி, நடுபாகங்களில் இருப்பவர்களாக எண்ணவேண்டும்.

9. இது உத்கூர்ச்ச நியாஸபக்ஷமாகும். அத: கூர்ச்சத்திற்கு விலோமமான முறையாகும். உத்கூர்ச்சம் சாந்தியையும், அத: கூர்ச்சம் புஷ்டியையும் கொடுக்க வல்லதாகும்.

10. அந்த கூர்ச்சம் (உள்கூர்ச்சம்) செய்யக் கூடாது. அது ஆபிசாரத்திற்கு சொல்லப்பட்டது. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து தர்பங்களால் அடிநுனியுடன் கூடியதாகவோ இல்லாமலோ அமைக்க வேண்டும்.

11. பவித்ரத்தை வலப்பக்கமாக சுற்றியபடி முடிச்சு போடப்பட்டோ இல்லாமலோ, மோதிரவிரலுக்கு உகந்த தான திவாரத்தை உள்ளதாக வேண்டும்.

12. முன்பு கூறப்பட்ட முடிச்சை மேலே உடையதாகவும் மிக அழகாகவும் முன்பு கூறியதுபோல வலப்பக்கமும் இரு பக்கங்களிலும் தேவதாதிஷ்டி தமாகச் செய்து

13. கையில் சேர்க்க வேண்டும். தேவார்ச்சனை செய்யும் காலத்தில் ஸ்வர்ணத்தால் (தங்கம்) நிர்மாணிக்கப்பட்ட அங்குலீயபவித்ரம் விருப்பப்பட்டதாகும்.

14. இருபத்தி மூன்று எண்ணிக்கையுள்ள தர்பைகளால் நிர்மாணிக்கப்பட்டதும், பன்னிரண்டு மாத்ரை முதல் முப்பத்தாறங்குலம் வளைந்ததாகவும்

15. விருப்பப்பட்ட இடைவெளியுடையதாக தொங்குவதாக நிர்மாணிக்கப்பட்டதும், சுண்டுவிரல் கணமுள்ளதாகவும் தர்பமாலையை செய்ய வேண்டும்.

16. அரசிலைகளால் அழகுபடுத்தப்பட்ட ரஜ்ஜூவாவது செய்ய வேண்டும். ஒருமுழ அளவு முதல் மூன்றங்குல அதிகரிப்பால்

17. பதினைந்து முழ அளவு வரை நீளமாகும், அதன் பாதி அளவு அகலமாகும். ஸமான மானதாகவும், நடுவில் எட்டில் ஓர்பங்காகவோ ஒன்பது அளவுள்ளதாகவோ கூறப்பட்டுள்ளது.

18. வாயிற்படி அளவு உயர, அகல, கனஅளவுகளாலோ தூண்களுக்கும் திவார ஆஸனங்களுக்கும் மூன்றங்குல அளவு அதிகரித்ததாக அளவாகும்.

19. நான்கங்குல அதிகரிப்பால், முப்பதங்குலம் வரையிலான அளவுள்ளதாக யக்ஞவ்ருக்ஷ மரங்களால் பிரதிஷ்டை முதலான கார்யங்களில் தோரணம் செய்தல் வேண்டும்.

20. கற்சிலையினாலோ, செங்கல்லினாலோ மரங்களினாலோ, தோரணம் செய்தல் வேண்டும். விருப்பப்பட்ட அளவு குழிதோண்டியும் அதே போல் அளவும் ஆகும்.

21. வாயிற்படியின் குறுக்கு பட்டையில் த்ரிசூலம், ஒன்பது சூலம், பஞ்ச சூலமோ ஏழங்குலம் ஆரம்பித்து ஐந்தங்குல வ்ருத்தியாக

22. பதினைந்து மாத்ரங்குலம் வரையில் த்ரிசூலத்தின் நீளம் (உயரம்) அமைக்கவும். அகலத்திலிருந்து கால்பாக அதிக அளவால் இரண்டங்குலத்திலிருந்து பன்னிரெண்டங்குலம் வரையிலும்

23. எவ்வளவு அளவு கணம் வேண்டுமோ, அந்த அளவு கனத்தை விருப்பமுள்ள அளவுப்படி செய்யவும். இவ்வாறு வாசற்படி தோரண அளவு கூறி அஷ்டமங்கலம் கூறப்படுகிறது.

24. ஒன்பதங்குலம் முதல் ஐந்தங்குல அளவு அதிகரிப்பால் முப்பத்தாறங்குல அளவு வரை கனமான அஷ்டமங்கலத்தின் அளவை கல்பிக்கவும்.

25. மேற்கூறிய அளவில் கால்பாகம், அரை பாகம், மூன்றில் ஒருபாக அளவோ, அவைகளின் அளவாக அமைக்கவும். இடைவெளியின் எட்டு பாகத்தில் ஒன்பதளவு உதாஹரணமாக்கப்பட்டுள்ளது.

26. கனமானது ஓரங்குலத்திலிருந்து கால் அங்குல அதிகரிக்கையால் ஏழங்குலம் வரையில் யக்ஞஸம்பந்த வ்ருக்ஷங்களாலோ உலோகங்களாலோ அஷ்டமங்கலம் செய்ய வேண்டும்.

27. தர்பணம் (கண்ணாடி) பூர்ணகும்பம், வ்ருஷபம், இரட்டைச்சாமரம், ஸ்ரீவத்ஸம், ஸ்வஸ்திகம், சங்கு, தீபம் இவைகளின் சிவனின் அஷ்டமங்கலமாகும்.

28. மற்ற தேவர்களுக்கும், தேவீகளுக்கும் வ்ருஷபத்தை விட்டுவிட்டு அந்த ஸ்தானத்தில் அவரவர்களின் வாஹனங்களை கிரஹிக்க வேண்டும்.

29. சைவாஷ்டமங்கலம் தேவர்களுக்கும், ஆச்ரமத்தை உடையவர்களுக்கு கிராமங்களிலோ தன் வீட்டிலோ, யஜமானனை அனுசரித்த உருவமுடையதாக

30. தர்பணம் முதலியவைகளை வரையவும், அதன் அளவு இப்பொழுது கூறப்படுகிறது. ஐந்தங்குலம் முதல் ஓரங்குல அதிகரிப்பதால்

31. இருபத்தைந்து மாத்ரை அளவுள்ளது வரை அதன் கனம் அமைக்க வேண்டும். மேற்கூறிய அளவை அனுசரித்து அகல அளவை பாதத்துடன் கூடியதாகவோ தர்பணம் (கண்ணாடி) அமைக்க வேண்டும்.

32. கால்பாக அளவோ, அல்லது அரைபாக அளவாலோ அதற்கு பாதம் அமைக்க வேண்டும். அவ்வாறே பூர்ணகும்பத்திலும் பாதஅளவு அமைக்க வேண்டும்.

33. தன்முகம் குறுக்களவாக இருந்தும் கொடியுடன் கூடியதாகவும் கொடியின் அளவு வெளிக் கொணர்ந்ததாகவும் அவ்வாறே வ்ருஷபத்தின் பாத அளவும் நின்ற கோலத்துடனோ அமர்ந்த கோலத்துடனோ

34. தாமரை போன்ற பாதமுடையதாகவும், மேலே குடை சின்னமுடையதாகவும், ஸ்ரீவத்ஸமானது கூறப்பட்டு கிராம அளவை உடையதாக இருக்கும்.

35. சங்கமானது ஊர்த்வமுகமாகவும் கீழே ஸ்பர்ச்சிக்காமலோ அமைக்கவும். ஸ்ரீவத்ஸத்தில் தாமரை போன்ற பாதமும், குடையும் அமைக்க வேண்டும்.

36. மேற்கூறிய அஷ்டமங்கலங்களை ஸ்தீரி களின் (பெண்) தலையில் வைத்ததாகவோ அமைக்கவும். அவர்களின் தேவதைகளை ஹே, பிராம்மணர் களே, கேளும், கண்ணாடியில் சூர்யனும் பூர்ண கும்பத்தில் வருணனும் பூஜிக்காதவர்களாவர்

37. சாமரத்தில் வாயுபகவானையும், ஸ்வஸ்திகத்தில் ஸரஸ்வதியையும், சங்கத்தில் விமலனாகிய சந்திரனையும், தீபத்தில் அக்னி பகவானையும் பூஜிக்க வேண்டும்.

38. ஸ்ரீவத்ஸவத்தில் லக்ஷ்மியையும், வ்ருஷபத்தில் வ்ருஷபத்தையும் அவரவர் மந்திரத்தினால் பூஜிக்கவும். கிழக்கு, மேற்கு திக்கை நோக்கியதாக இரட்டைசாமரம் அமைக்க வேண்டும்.

39. ஒவ்வொன்றையும் வேதிகையின் வலது, இடது பாகமாக வைத்து பூஜிக்கவும். அஷ்டமங்கலத்ரவ்ய ரூபமாக வைக்காமல் அந்த ஸ்தானத்தில் அவற்றை பூஜிக்க வேண்டும்.

40. வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், (கத்தி) பாசம், அங்குசம், த்வஜம் (கொடி) கதை சூலம், பத்மம், சக்ரம் என்று தசாயுதம் அமைக்க வேண்டும்.

41. தண்டம் என்ற ஆயுதத்தை எடுத்து விட்டு த்வஜமும், அங்குசமுமோ அமைத்து பூஜிக்கவும். ஹே, பிராம்மணர்ளே, உலோகங்களாலோ, யக்ஞவ்ருக்ஷங்களாலோ அமைக்கவும். உலோகத்தால் செய்தால் பிம்ப அளவு முறைப்படி செய்ய வேண்டும்.

42. தேவரூபங்களை கைகளால் கூப்பிய கரமுடையதாக அமைக்கவும். சக்திக்கும், கதைக்கும் ஸ்தீரி (பெண்) உருவமாக அமைக்கவும். மற்றவைகளை ஆண் உருவமாக அமைக்க வேண்டும்.

43. ஒன்பது தாள அளவுள்ளதாக அமைப்பு முறை கூறப்படுகிறது. அவைகளின் தலைமேலோ, கையிலோ, கிரீடத்தின் மேலோ வஜ்ரம் முதலியவைகளை அமைக்க வேண்டும்.

44. தேகலப்தாங்குல அளவினால் அவைகளின் அளவு முறை கூறப்படுகிறது. அவைகளை முப்பத்தாறங்குல நீளமும், எட்டங்குல அகலமுமாகவும்

45. பதினைந்தங்குலம் முதல் இரண்டங்குல அதிகரிப்பால், நாற்பத்தியொன்பது மாத்ரங்குல அளவுவரை நீளமாகும்.

46. இதுவரை உலோக பிம்ப அளவு கூறி தாருஜ (மரம்) பிம்பஅளவு கூறப்படுகிறது. மாத்ராங்குல அளவினால் விருப்பப்பட்ட முறைப்படி செய்யவேண்டும், அதன் விஸ்தார அளவு கூறப்படுகிறது.

47. ஸ்ருக், ஸ்ருவம், முறைப்படி செய்யவேண்டும். அதன் அமைப்பு முறை கூறப்படுகிறது. அதன் பக்கவாட்டிலோ, அந்த மரத்தின் நடுவிலோ அதற்கு திவாரம் அமைக்க வேண்டும்.

48. முப்பத்தாறங்குலம் அல்லது முப்பத்தைந்து அங்குல அளவு நீளமாகவோ, அதன் கனமானது ஆறங்குலமும், வேதிகை ஆறங்குலத்திலும் கட்டை விரம் பருமன் கர்ணிகையும் அமைக்க வேண்டும்.

49. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற அளவினால் குழியானது அமைக்கவும். ஏழரை அங்குல அளவு இடைவெளி விடாததான ஓட்டையையும், சதுரச்சரம் போன்ற அழகான முகத்தையுடையதாக அமைக்க வேண்டும்.

50. சுண்டுவிரல் அளவு நெய் செல்லும் உத்தமமான திவாரத்தை (ஓட்டையை) அமைக்கவும். சுருக்கின் அடிபாக கலச அளவு ஆறங்குல நீளம்வரை தண்டத்தின் நுனிவரையிலும் நான்கங்குல அளவில் வேதிகையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.

51. விருப்பப்படி கலசத்தின் அளவையும் இரண்டங்குல அளவால் வேதிகையையும் அமைக்கவும். பலவித மரத்துண்டுகளால் தாமரையிதழ்கள் போல் அலங்கரிக்கப்பட்ட

52. ஸ்ருக்கை மடக்கின் அடிபாகம் எவ்வாறிருக்குமோ அவ்வாறாகவும் பக்கத்திலுள்ள கர்ணபாகம் ஒருபாகம் குறைந்த ஐந்து மாத்ரையால் (4 மாத்ராங்குல அளவில்)

53. சுண்டுவிரல் பருமன் தண்டமும், நேரானதாக அமைத்து ச்ருக்கை செய்ய வேண்டும். அல்லது முப்பதங்குல நீளஅளவும் எட்டங்குல விஸ்தாரமும் (அகலம்)

54. அதன் பாதி நான்கங்குல கனமும், முகமானது ஐந்து மாத்ராங்அகுல அளவுமாகும். முகமானது முக்கோணமாகவும், நடுவில் ஓட்டை யையுடையதாகவும் அமைக்க வேண்டும்.

55. பக்கவாட்டுபாகம், இரண்டங்குலமும், வேதிகை எட்டங்குலமும் ஆகும். அதனடிபாகம் கண்டிகையை அமைத்து அரை மாத்ராங்குலத்திலிருந்து ஒவ்வொரு அரைமாத்ராங்குல வ்ருத்தியாக

56. தண்டம் ஒன்பது அங்குலமாகும். அதன் அகலம் ஆறங்குலம், கைப்பிடி எட்டங்குல அளவிலும் அதன் நீளம் எட்டங்குல அளவுமாகும்.

57. அல்லது வேறுவிதமாக ஸ்ருக்கின் அளவு கூறப்பட்டுள்ளது. முப்பத்திரண்டு அங்குல நீளமும், ஏழங்குல அகலமுமாகும்.

58. அதன் கனம் நான்குமாத்ரையளவையும், முகத்தின் அகலம் ஆறங்குலமும் கர்ணமென்ற பக்கவாட்டுப்பக்கம் பதினைந்தங்குலமும், அகலம் ஐந்து மாத்ராங்குல அளவுமாகும்.

59. வேதிகை ஏழங்குல நீளமும், தாமரை பதினைந்தங்குலம் ஆகும். கண்டிகை ஓரங்குலமும், அதன் நீளம் ஏழுமாத்ரங்குலமும் ஆகும்.

60. பன்னிரெண்டு அங்குலம் தண்டபாகமும் (அதன்) அகலம் ஆறங்குலமும் ஆகும். அதன் அடியில் கலசாதாரமாக இரண்டங்குல நீளத்தில் பத்தங்குல சுற்றளவு உடையதாக அமைக்க வேண்டும்.

61. கலசத்தின் அடியில் பாதத்தை அமைக்கவும். வேறு விதமாகவும் கூறப்படுகிறது. முப்பத்தாறங்குல நீளமும், ஏழங்குல அகலமுமாகும்.

62. அகல விஸ்தாரத்தின் அரைபாகமான நான்கங்குல கனமும், முகம் ஏழங்குல அளவும் விஸ்தார நீளத்தினால் பன்றி முகம் போலும் அமைக்க வேண்டும்.

63. மூன்றிலொருபாகம் அக்ர (நுனி) பாகம் செய்து மற்ற பாகங்களை விட்டுவிடவும். பக்கவாட்டு கனம் இரண்டுமாத்ரையும், விஸ்தாரம் நான்கங்குலமாகும்.

64. வேதிகை எட்டங்குல நீளமும், அதே அளவு அகலமுமாகும். நான்கு மாத்ரை அல்லது மூன்று மாத்ரையளவில் அதன் நடுவில் (வேதிகை) திவாரம் அமைக்க வேண்டும்.

65. தண்ட அளவு ஆறங்குலமும், அதன் மத்தியில் மூன்றங்குல அளவில் கண்டிகையும் அமைக்கவும். அந்த கண்டிகையானது அரையங்குல வ்ருத்தியால் நான்கங்குலம் வரை செய்யவேண்டும்.

66. பதிமூன்றங்குலம் தண்டமும், அதன் அடியில் முன்புபோல் கும்ப அமைப்பும் உள்ளதாக ஸ்ருக் செய்யவும். ஸ்ருவமும் அவ்வாறே அந்த அளவுள்ளதாகவும் யோநி அமைப்பு உள்ளதாகவும் அமைக்க வேண்டும்.

67. ஒன்று, இரண்டு, மூன்றங்குல அளவு குறைந்ததாகவோ, நீளம் அமைக்கவும். ஆறங்குல அகலமாகவும், தண்டத்தின் அடியில் தாமரை போன்ற அமைப்பும் செய்ய வேண்டும்.

68. அதன் பாதிஅளவான மூன்றங்குலம் கண்டபாகமாகவும் முறைப்படி மெலிந்ததாக அமைக்கவும். கோபுரம் போன்ற அமைப்புள்ளதாக நெய் எடுக்கும் ஸ்தானம் நுனியிலுள்ளதாக அமைக்க வேண்டும்.

69. ஸ்ருவத்தின் பின்புறம் இரண்டு கும்பம் போல் அமைப்புள்ளதாகவும், முன்பக்கம் பதினாறு உளுந்து முழுகும் அளவுள்ளதாக ஆழ அளவும் உள்ளதாக அமைக்கவும். புதிதாக அமைத்து செய்வது உத்தமம், கிடைக்காவிடில் பழமையானதை கிரஹிக்கவும் (எடுத்துக்கொள்)

70. அந்த திரவ்யமதிப்பிற்குள்ளான (பொருளுக்குள்ள) பணத்துகையை கொடுத்து பழமையான ஸ்ருக், ஸ்ருவத்தை கிரஹிக்கவும். குருவின் அனுமதி பெற்று அந்த திரவ்யத்தை உபயோகிக்க வேண்டும்.

71. பழமையான கரணங்களை (உதவிப் பொருள்களை) உபயோகித்தால் ஆயிரம் ஆவ்ருத்தி அகோர மந்திர ஜபம் செய்யவும். எந்த சாஸ்திரத்தினால் பரமேஸ்வரனுக்கு பூஜாக்ரியைகள் நடைபெறுகிறதோ

72. அங்கு அந்த சாஸ்திர ஸம்பந்தப்பட்ட கார்ய உபகரணங்களை கிரஹிக்கவும். உத்ஸவம் முதலிய கர்மாக்களில் கூறப்படாததை வேறு விதமாக கிரஹிக்க வேண்டும்.

73. அஸ்திரதேவர், உற்சவபிம்பம், தேவனின் உபகரணத்ரவ்யங்கள், அந்த ஆலயத்தைச் சேர்ந்ததாக கிரஹிப்பது உத்தமமாகும். வேறு ஆலயத்தில் உள்ளதை எடுத்துக் கொள்ளக்கூடாது.

74. ஆயாதி முதலிய அளவுகளால் அசுபமானதாக லிங்கம் முதலானவைகளின் திரவ்யங்கள் விருத்தமானதாக (மாறுபட்டதாக) ஆகும். அந்த லிங்காநுகூலமாக பிம்பம் முதலியவை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால்

75. அந்த பிம்பத்தினால் உத்ஸவ கார்யங்கள் செய்யலாம். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு கரணங்கள் எடுத்துச் செல்வதற்காக சுத்தியை அனுஷ்டிக்க வேண்டும்.

76. ஸமித்து, நெய், அன்னம் இவைகளால் ஆயிரம் (முறை) ஆவ்ருத்தி சாந்தி ஹோமம் செய்யவும். குறைந்த மாத்ரை அளவுள்ள (ஹ்ரஸ்வப்ராஸாத) மூலமந்திரத்தினால் அதிகமான பூஜைகளுடன் செய்ய வேண்டும்.

77. பாலுள்ள ஜாதிமரங்களால் அழகுடையதாக தோரணங்கள் அமைக்கவும். ஐந்து, ஆறு, ஏழு முழ அளவுள்ளதாக அதம (கடைநிலை) தோரணங்களின் நீளமாகும்.

78. முப்பத்திரண்டங்குல நுனியுள்ளதாக மற்றவைகளை அமைக்கவும். அவைகளில் ஒருமுழத்திற்கு மேற்பட்டதாக அந்த வ்ருத்தியளவின் பாதியாலும் அழகானதாக அமைக்க வேண்டும்.

79. இரண்டு சாகைகளின் நடுபாகம் சமமான உயரமாகவோ, குறைவான உயரமாகவோ அமைக்கவும். சூலபாகம் எட்டங்குலத்தினால் மற்றவைகள் பதினாறங்குலத்தினால் செய்யவேண்டும்.

80. இவ்வாறு ஒன்று முதல் நான்கு முழம் வரையுள்ள க்ஷúத்ரமயமான தோரணத்தில் நுனியின் அரைபாக அளவிலோ யாகாதி கார்யங்களில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கரணலக்ஷண விதியாகிய எழுபத்தியிரண்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar