Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் பாதச் சுவடு இடமாற்றம்: கிராம ... சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்! சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மாங்கனி திருவிழா சுவாமி வீதியுலாவில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
11:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, கோலாகலமாக நடந்தது. சிவபெருமான் வீதியுலாவின் போது பக்தர்கள், மாங்கனிகளை வீசி மகிழ்ந்தனர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான, காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. திருக்கல்யாணம்இத்திருவிழா, கடந்த 1ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. காலை 10.30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க, புனிதவதியாருக்கு, பரமதத்தர் திருமாங்கல்யம் அணிவித்தார். மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது. மாங்கனி வீசல்நேற்று அதிகாலை, பிக்ஷõடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்குக்கும் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள், சென்டை, மத்தளம் மேளம் முழங்க, பவழக்கால் விமானத்தில், சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அச்சமயம் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பக்தர்கள், வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு பின் பாதுகாப்பு ஷெட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar