Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் ... மாயாகுளம் மங்களேஸ்வரி அம்மனுக்கு முளைக்கொட்டு உற்ஸவம் மாயாகுளம் மங்களேஸ்வரி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு புதிய பாதுகாப்பு ஷெட்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு புதிய பாதுகாப்பு ஷெட்

பதிவு செய்த நாள்

08 அக்
2025
10:10

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு பின் பாதுகாப்பு ஷெட் அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். பழமையான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும். இவ்விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். தேர்த் திருவிழா முடிந்த பின், தேர் மழையில் நனையாமலும், வெயிலில் காயாமலும் இருக்க, தகர சீட்டால் பாதுகாப்பு ஷெட் அமைக்கப்படும். பழைய தகர சீட்டுகள் மழையில் நனைந்ததால் துருப்பிடித்தது. அதனால் துருப்பிடிக்காத புதிதாக ஷெட் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நான்கு பக்கமும் நில மட்டம் வரை கான்கிரீட் பில்லர்கள் அமைத்து, அதன் மீது, 30 அடிக்கு நான்கு பக்கம் இரும்பு ஆங்கில்கள் அமைக்கப்பட்டன. ஆங்கிலை சுற்றியும் ஜிங் சீட்டால், ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியானது, கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கின. ஆறு மாதங்களாக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. தற்போது அனைத்து பணிகளும் செய்து முடித்து, தேருக்கு முழுமையாக ஷெட் அமைக்கப்பட்டது. இதைப்பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar