Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு பூஜை எவ்வாறு செய்ய ... சபரிமலை அய்யப்பன் கோவில் இம்மாதம் மூன்று முறை திறப்பு சபரிமலை அய்யப்பன் கோவில் இம்மாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆவணிஅவிட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2012
10:08

பூணூல் அணியும் சடங்கான உபநயனம், ஆவணிஅவிட்டமான இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேளுங்கள்.
உபநயனம் என்பது குருகுலவாசத்துக்கு முதல்படி. "உபநயனம் என்பதற்கு குருவுக்குக் கிட்டே கொண்டு போய்விடுவது என்று அர்த்தம். புத்தி சம்பந்தமான வேதவித்தையை படிக்கும்போது அகங்காரம் வந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தை விட்டுக் கண்டிப்பிலே ஒழுங்குக்குக் கொண்டு வருகிற குருவிடம் கொண்டு போய்விடச் சொல்லி இருக்கிறது. இரண்டு தெய்வக்குழந்தைகள் மநுஷ்ய ரூபத்தில் அவதாரம் பண்ணினபோது உபநயன விசேஷத்தாலேயே தங்கள் அவதார காரியத்தைப் பண்ணிக் காட்டினர். வேதம் மதம் நலிவடைந்தபோது புத்துயிர் கொடுத்த சங்கரரும், ஞானசம்பந்தரும் தான் அந்தக் குழந்தைகள். சம்பந்த மூர்த்தி சுவாமி பால்யத்திலேயே உபநயனம் பெற்ற நாலுவேதங்களையும் அத்யயனம் பண்ணினார் என்று பெரியபுராணத்தில் சொல்லியிருக்கிறது. பாலப்பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்து விட்டால் பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது மனோசக்தி, தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் தரவல்லது. இந்த ஜபத்தாலேயே குழந்தைகளுக்கு நல்ல சித்தம், புத்தி தீட்சண்யம், சரீர புஷ்டி எல்லாம் உண்டாகும். பூணூல் அணிவதோடு மட்டுமல்லாமல் சந்தியா வந்தனமும், வேதஅப்யாசமும் பண்ணவேண்டியது அவசியம். இவ்வாறு சொல்கிறார் பெரியவர்.

ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரிஜபம் பின்பற்றப்படுகிறது. இதுபற்றி சுவாமி சிவானந்தர் சொல்வதைக் கேளுங்கள். காயத்ரி மந்திர ஜபதினம் மிகவும் புனிதமானது. பாராயணம் செய்பவரைக் காக்கும் கேடயமாகவும், கோட்டையாகவும் விளங்குகிறது. காயத்ரி என்றால் "ஜபிப்பவனைக் காப்பது என்று பொருள். மனிதனை கடவுளாக்கி உயர்ந்த ஆன்மிக அறிவையும், ஒளியையும் நல்கும் தெய்வீகசக்தியே காயத்ரி. உங்களுக்கு விருப்பமான எந்த வடிவத்தில் கடவுளை வழிபட்டாலும் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
காயத்ரி ஒரு பெண் தெய்வமாகக் கருதப்படுகிறாள். கடவுளை அன்னையாக வழிபடுவோர் இவ்வாறு எண்ணுகின்றனர். மந்திரங்களின் மகுடமான காயத்ரியை, ""ந காயத்ர்யா: பரோ மந்த்ர: என்று குறிப்பிடுவர். இதைவிடச் சிறந்த மந்திரம் வேறு கிடையாது என்பது பொருள்.

""ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
இந்த பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தவரும், ஜோதி வடிவானவரும், அனைத்து பாவத்தையும், அறியாமையையும் அகற்றுபவருமான மேலான தெய்வத்தின் மகிமையை நாம் தியானிக்கிறோம். அவர் நம் அறிவைத் துலக்குவாராக என்பது இதன் பொருள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar