Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருப்பதி பெருமாள் தீர்த்தவாரிக்காக ஸ்ரீரங்கம் வருகிறார்!
ஆகஸ்ட் 23,2012
அ-
+
Temple images

திருச்சி: ஆவணி மாதம் 2 அமாவாசை மற்றும் 33 நாட்கள் வருகிறது. இதுபோன்ற ஒருநிகழ்வு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும். இதை முன்னிட்டு திருப்பதி பெருமாள் இரண்டு இடங்களில் தீர்த்தவாரி செய்வது வழக்கம். இம்முறை திருப்பதியிலும், ஸ்ரீரங்கத்திலும் தீர்த்தவாரி மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக திருப்பதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கும் நித்திய கல்யாண பெருமாள் வருகிற 24ம் தேதி ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கம் வரும் பெருமாள் அங்குள்ள சிருங்கேரி மடத்தில் தங்குகிறார். அன்றைய தினம் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பும், ஆராதனையும் நடைபெற இருக்கிறது. பின்னர் 25ம் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது. பின்னர் 26ம் தேதி உலக நன்மைக்காக சிறப்பு யாகமும், லட்சார்ச்சனையும் நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், ஏகாந்த‌சேவையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சப்தபிரகார கமிட்டி செய்துள்ளது. தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக திருப்பதி பெருமாள் ஸ்ரீரங்கம் வர இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.