Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 22 நாட்களில் ரூ. 77.25 கோடி ... சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி பவனி! சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜை: 23ல் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பெயரில் இணையதளங்களில் பண மோசடி பக்தர்களே உஷார்..!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 டிச
2014
11:12

சபரிமலை: சபரிமலை பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி பண மோசடி நடைபெற்று வருவதை தேவசம்போர்டு கண்டு பிடித்து பல்வேறு இணையதளங்களை முடக்கியுள்ளது. பக்தர்கள் சபரிமலைக்கு காணிக்கை செலுத்தும் போது கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலை தொடர்பான எல்லா ஏற்பாடுகளும் நேரடியாகவே நடத்தப்பட்டு வந்தது. அறை வேண்டுபவர்கள் சன்னிதானம் சென்றால் மட்டுமே பெற முடியும். வழிபாடு நடத்த வேண்டுமெனில் நிர்வாக அலுவலகத்தில் சென்று பணம் கட்டினால் மட்டுமே உறுதி செய்யமுடியும்.

பிரசாதம் வாங்குவதும் நேரடியாக மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலையில் அறைகள் முன்பதிவு ஆன்லைனில் மாற்றப்பட்டது. www.sabarimalaaccomodation.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சபரிமலையில் மொத்தம் உள்ள அறைகளில் 30 சதவீதம் அறைகள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. இது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் கணபதிஹோமம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம் போன்ற சில வழிபாடுகளுக்கு ஆன்-லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. அப்பம், அவரணை பிரசாதங்களும் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்கும் இந்த இணைய தளத்தில் லிங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆன்-லைனில் புக்கிங் செய்பவர்களுக்காக வழிபாடுகள் நடத்தப்பட்டு, அதற்கான பிரசாதம் ஆன்-லைன் பிரசாத கவுண்டரில் வைக்கப்பட்டிருக்கும். இதுபோல www. travancore devaswomboard.org இணையதளமும் சபரிமலையின் அதிகார பூர்வ இணையதளமாகும். ஆனால் அன்னதானத்துக்கு நன்கொடை பெறுவதற்கு தேவசம்போர்டு இணையதளத்தில் வசதி செய்யவில்லை.

இதை பயன்படுத்தி சிலர் சபரிமலை ஐயப்பன் பெயரில் இணையதளங்களை உருவாக்கி அன்னதானம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபடுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக சைபர்கிரைம் போலீசுக்கு புகார் அனுப்பி பல இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சபரிமலை தொடர்பாக ஆன்லைனில் செல்லும் போது அது தேவசம்போர்டின் அதிகாரபூர்வ இணையதளம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar