Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் ... சபரிமலையில் மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி; சாமியே சரணம் ஐயப்பா என பக்தர்கள் பரவசம் சபரிமலையில் மூன்று முறை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்; மகரசங்கரம பூஜை கோலாகலம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்; மகரசங்கரம பூஜை கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 ஜன
2024
07:01

சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம பூஜை இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடைபெற்றது.

சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபணபவனி இன்று மாலை 5:30 -க்கு சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை 6.20 மணி வாக்கில் 18-ம் படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சிதரும்.

மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் ஐயப்பனுக்கு நடத்தப்படும் இந்த பூஜை இன்று அதிகாலை 2:46 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.இந்த பூஜைக்கு பின்னர் வழக்கமான நெய் அபிஷேகம் கணபதி ஹோமம் உஷ பூஜை போன்றவை நடைபெற்று பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும் அதன் பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் 18 படிகள் ஏறுவதற்கு அனுமதி இல்லை

கடந்த இரண்டு நாட்களாக இங்கு வந்த பக்தர்களில் பெரும்பகுதி பேர் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில் பெட்ஷீட், மரக்கிளைகளால் தற்காலிக ஷெட்டுகள் கட்டி தங்கியுள்ளனர். கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோதி தெரியும் இடங்களில் மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் பத்தணந்திட்டை - நிலக்கல்-பம்பை ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து மதியத்துக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இரவு 8.00 மணிக்கு பின்னர் இவர்கள் மலை ஏறலாம். மகரஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் நிலக்கல் மற்றும் பிற வெளியூர்களுக்கு செல்ல வசதியாக 1200 கேரளா அரசு பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மகரவிளக்குக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜை நேற்று காலை கணபதிேஹாமத்துக்கு பின்னரும், உச்சபூஜைக்கு முன்னரும் தந்திரி கண்டரரு கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்தினார். கூட்டம் காரணமாக எவ்வித சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கு போலீஸ், தீயணைப்பு படை உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 35 ஸ்டிரச்சர் சர்வீஸ் சன்னிதானம் மற்றும் பம்பையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் நான்கு எஸ். பி., 19 டி. எஸ். பி., 15 இன்ஸ்பெக்டர் உட்பட 1000 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாக கேரள போலீஸ் டி.ஜி.பி. டாக்டர் ஷேக் தர்வேஷ் சாஹிப் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மகர விளக்கு கால ... மேலும்
 
temple news
சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் ... மேலும்
 
temple news
சபரிமலை; கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாட்கள் நடைபெற்ற மண்டலகாலம் நிறைவுபெற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை;  சபரிமலையில் நேற்று மாலை தங்க அங்கி அணிவித்து நடைபெற்ற தீபாராதனையை பல்லாயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar