திருப்புத்துார், திருப்புத்துார் அருகே திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்பாள் சமேத திருக்கோளநாதர் கோயில் ஆனித் திருவிழா ஜூன் 27 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆனித் திருவிழா 11 நாட்கள் தேரோட்டத்துடன் நடைபெறும்.ஜூன் 26ல் வாஸ்து பூஜைகள் நடைபெறும். ஜூன்27 ல் காலை 8:00 மணிக்கு கொடியேற்றம், காலை 10: 30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருநாள் மண்டபம் எழுந்தருளல், இரவு 8:00 மணிக்கு காப்புக்கட்டுதல் நடைபெறும். தொடர்ந்து ஜூலை 1 இரவில் திருக்கல்யாணம், ஜூலை 5ல் தேரோட்டம், ஜூலை 6ல் சுவாமி தீர்த்தம் கொடுத்தல், ஜூலை 7 ல் சுவாமி மலை ஏறுதல் நடைபெறும்.