பிரமாண்ட அயோத்தி ராமர் கோயிலில் இருப்பது என்ன என்ன?; 392 தூண்கள், 44 கதவுகள், 5 மண்டபங்கள்.. முழு தகவல்



அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலில் உள்ள வசதிகள் குறித்து அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.

392 தூண்கள்; இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அறக்கட்டளை கூறியுள்ளதாவது: நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளை கொண்டதாக ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. 380 அடி நீளத்திலும் (கிழக்கு மேற்கு திசையில்) 250 அடி அகலத்திலும், 161 அடி உயரத்திலும் கோயில் உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. 392 தூண்கள், 44 கதவுகள் உள்ளன. ஒவ்வொரு தூண்கள் மற்றும் சுவர்களில், தெய்வங்களின் சிலை இருக்கும். பிரதான கருவறையில் ராமர் சிலை வைக்கப்படும். முதல் தலத்தில் ஸ்ரீராம் தர்பார் அமைக்கப்பட்டு உள்ளது.

5 மண்டபங்கள்; கோயிலில், நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் உள்ளன.

லிப்ட் வசதி; கிழக்கு திசையில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் நுழைவார்கள். 32 படிக்கட்டுகள் இருக்கும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வசதிக்காக சாய்வுதளம் மற்றும் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி, 732 மீட்டர் நீளத்திலும் 14 அடி உயரத்திலும் சுற்றுச்சுவர் உள்ளது. கோயில் அருகே, வரலாற்று சிறப்பு மிக்க, பழங்காலத்து கிணறு ஒன்று உள்ளது.

மருத்துவ வசதி; பக்தர்கள் வசதிக்காக 25 ஆயிரம் பேர் தங்கும் வகையில், பக்தர்கள் வசதி மையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு மருத்துவ மற்றும் லாக்கர் வசதி இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்