ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!



தீபாவளியை ஒட்டி ஏராளமான கதைகள் உண்டு. அவற்றில் முதலாவதாகச் சொல்லப்படுவது நரகாசுரன் கதை. நரகாசுரனை சம்ஹாரம் செய்த இந்த திருநாளுக்கு நரக சதுர்த்தசி என்ற பெயரும் உண்டு. நரகாசுர வதம் என்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை நீக்கிக் கண்ணன் நமக்கு அருள்புரிவதையே குறிக்கும்.

ராவணனைச் சம்ஹாரம் செய்து விட்டு ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் அயோத்திக்கு திரும்பிய நாளை தீபாவளியாக அயோத்தி மக்கள் கொண்டாடினர். பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் அயோத்தி மக்கள் அவர்களைத் தரிசித்த மகிழ்ச்சியில் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வரவேற்று மகிழ்ந்தனர். ராமரின் தாயான கோசலை சீதையிடம், அம்மாசீதா! திருமகளான நீ இல்லாமல் இந்த அரண்மனையே இருண்டு போனது. இப்போது விளக்கேற்றி வை. இருள் நீங்கி எங்கும் ஒளி பிரகாசிக்கட்டும்! என்றாள். தீபாவளியை முன்னிட்டு பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலும் அடிப்படை விஷயம் நம்மில் உள்ள இருள் நீங்கட்டும்.. நம் உள்ளும் புறமும் ஒளி வீச, திருமகள்அருள் புரியட்டும். வரும் ஜன.,22ம் தேதி பல கோடி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பாரத நாடே தீபாவளியாக கொண்டாட தயாராகி வருகிறது.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

அயோத்தி கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு வழங்கபட உள்ள சீதை வீட்டு சீதன இனிப்புகள்

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்