அயோத்தி ராமர் கோயில் நுழைவு வாயிலில் பிரமாண்ட கருடன், அனுமன் சிலைகள்



அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க, 7,000 பேருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் அழைக்கப்பட உள்ளனர். இதற்கான அழைப்பிதழ் தயாராகிவிட்டது. அதில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் அடங்கிய பிரதான அழைப்பிதழுடன், குழந்தை ராமர் சிலையை கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய அழைப்பிதழும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், ராமர் கோயிலின் பிரதான நுழைவு வாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமன் மற்றும் கருடன் போன்ற பிரமாண்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். இச்சிலைகள் கோவிலுக்கு செல்லும் படிகளின் இருபுறமும் அமைக்கப்பட்ட அடுக்குகளில் நிறுவப்பட்டு உள்ளன. ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீரத் சேத்ரா அறக்கட்டளை இந்த படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்