டிசம்பர் 23,2024
கோவை; ஸ்ரீ மாருதி கான சபா சார்பில் மார்கழி மாத உற்சவ நிகழ்ச்சி நாம சங்கீர்த்தன மேளா நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி கோவை ஆர். எஸ். புரத்தில் இருக்கும் கானா சபா ஆடிட்டோரியத்தில் துவங்கியது. இதன் முதல் நாள் நிகழ்வாக மாலை 5.30மணிக்கு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி அதைத் தொடர்ந்து பிரியதர்ஷினி பஜன் குரூப் சார்பில் மார்கழி உற்சவம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வாக சுதன்வா பஜன் மண்டலி சார்பில் உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஞானாமிர்த பஜன் மண்டலி சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்வாக நாம பஜன் மண்டலியும் ராஜகணபதி சபா சார்பில் மார்கழி மாத உற்சவம் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்வாக நேற்று மாலை அன்னூர் சண்முகம் பஜன் குரூப் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக ஸ்ரீ சாய் கலாசாகர குரூப் சார்பில் மார்கழி மாத நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.