டிசம்பர் 26,2024
காஞ்சிபுரம்; பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பரமேஸ்வர விண்ணகரம் என, அழைக்கப்படும், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் நடைபெறும். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடைபெறுவதால், வரும் 2025 ஜன., 10ல் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் தரிசனம் இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கோவில் நுழைவாயிலில், பேனர் வைக்கப்பட்டுள்ளது.