டிசம்பர் 26,2024
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் மார்கழி மாத நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடியவாறு, கும்மியடித்து வீதிகளை வலம் வந்தனர்.
மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதி டிரஸ்ட் சார்பில் குத்தாலம் மங்கல சக்தி ஸமிதி மற்றும் சுபிக்ஷா ஹிந்தி வித்யாலயா நடத்திய மார்கழி மாத சங்கீர்த்தனம் (வீதி பஜனை) நடைபெற்றது இதில், சங்கர வித்யாலயா, டிபிடிஆர் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் கிருஷ்ணர், ராதை, மீனாட்சி உள்ளிட்ட வேடங்களை அணிந்து பங்கேற்றனர். மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் தொடங்கிய வீதி பஜனை கோயில் வீதிகள், ஒத்த தெரு, காவிரி துலாக்கட்டம், இரட்டை தெரு வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. இதில், அனைவரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியவாறும், கும்மிடியடித்தவாறும் பக்தி பாடல்களை பாடியவாறு வீதிகளை வலம் வந்தனர்.