ஸ்ரீரங்கத்தில் மார்கழி பத்தாம் நாள் வழிபாடு; நாற்றத்துழாய்முடி நாராயணன் கோலத்தில் சுவாமி

டிசம்பர் 25,2024



ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் பத்தாம் நாளான இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் நாற்றத்துழாய்முடி நாராயணன் திருக்கோலத்தில், நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,  உற்சவர் அருள்பாலித்தனர். 


யாராவது நன்றாகத் தூங்கினால் சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்


மார்கழி ஸ்பெஷல் 10; திருமண வரம் தரும் வராகப்பெருமாள்!

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருவெம்பாவை பாடல் 11

மேலும்